அதிமுகவை உடைக்க வேண்டிய தேவை பாஜகவிற்கு இல்லை : பொன் ராதாகிருஷ்ணன்

Must read

அதிமுகவை உடைக்க வேண்டிய தேவை பாஜகவிற்கு இல்லை” என்று அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான: பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன், அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பாஜக முயல்வதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இது குறித்து பதில் அளித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ”அதிமுகவை பலப்படுத்தி்க் கொள்வது அந்த கட்சியின் பொறுப்பு. அந்த கட்சியை உடைப்பதற்கான தேவை எங்களுக்கு இல்லை. எங்களது கட்சியை தமிழகத்தில் முக்கிய பிரதான கட்சியாக மாற்ற நாங்கள் உழைத்து வருகிறோம்,”என்றார் .

மேலும் அவர், “திமுக மற்றும் அதிமுக கட்சியின் ஆட்சியால் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை. ‘பல கட்சிகளில் இருந்து எங்களது கட்சிக்கு வந்து பெறுபவர்களை நாங்கள் உதாசீனப்படுத்துவது கிடையாது. தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி வரவேண்டும் என ஒட்டு மொத்த தமிழகமும் விரும்புகிறது. அவரது கொள்கைகளை விரும்புபவர்கள் எங்களுடன் உள்ளனர். அவர்கள் எங்களோடு இணைவதால் எங்களது கட்சிக்கு பலர் வருகின்றனர்,”  எனறும் தெரிவித்தார்.

 

More articles

Latest article