சென்னை,

ப்பல்கள் மோதலால் டேங்கர் கப்பலில் இருந்து கடலில் கொட்டிய எண்ணை அகற்ற இளை ஞர்கள் உதவ வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எண்ணூர் துறைமுகம் அருகே  இரண்டு  கப்பல்கள் மோதியதை தொடர்ந்து, டேங்கர் கப்பலின் ஒரு பகுதி உடைந்து அதில் இருந்த எண்ணை  கடலில் கொட்டியது.

இதன் காரணமாக எண்ணூர் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் உள்ள கடல் பகுதி எண்ணை மாசு படித்து காணப்படுகிறது. இந்த மாசு  சென்னை வரை கடற்கரை முழுவதும் படிந்து வருகிறது. கடல்நீரும் கருப்பாக காட்சி அளிக்கிறது.

இதனால் கடலில் வாழும் உயிரினங்கள்  மீன் ஆமை, நண்டு போன்றவை ஏராளமாக உயிரிழந்து வருகின்றன.

 

கடற்கரை ஓரங்களிலும் மணல் திட்டுக்களிலும் எண்ணெய் படலம் அதிகளவில் ஒதுங்கியுள்ள தால் கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

கடலில் வலையையை வீசினால் அதிலுள்ள எண்ணெய் படலத்தால் வலைகள் பாதிக்கப்பட்டு உப்யோகமில்லாமல் போவதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் மீன் பிடி தொழிலே பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடலில் கலந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்ற  மனித உழைப்பால் மட்டுமே முடியும் என்பதால் வாட்ஸ் அப் இணையதளம் மூலம் இளைஞர்களை அழைக்கும் பணியில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இதுவரை துறைமுக பணியாளர்கள் , கடலோர காவல் படையினர் , தொண்டு நிறுவன ஊழியர்கள் என சுமார் ஆயிரம் பேர் வரை எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 15 டன் எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ளது.

மேலும்  20 டன்கள் வரை எண்ணெய் படலம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்காக தனி கட்டுப்பட்டறையை துறைமுக கழகமும் கடலோர காவல்படையும் இணைந்து துவக்கி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக கடலில் உள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரையில் 50% பணிகள்  முடிவடைந்துள்ளது.  மேலும் தற்போது எண்ணை படலம் கடல் அலையின் காரணமாக பல பகுதிகளுக்கு பரவி வருவதால் எண்ணை படலத்தை அகற்ற மேலும் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

இதை மனித உழைப்பால் மட்டுமே அகற்ற முடியும் என்பதால் மேலும் தன்னார்வ இளைஞர்கள் இதில் உதவ வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.