சென்னை: தமிழ்நாட்டில் ரேபிடோ பைக் டாக்சி’ சேவைபோல பைக் டாக்சி சேவை தொடங்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. அதற்கானபல்வேறு  நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன்  நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

கால் டாக்சி, கால் ஆட்டோ போல, பைக் டாக்சி சேவைகளும் நாடு முழுவதும் பல மாநிலங்களின் முக்கிய நகரங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையிலும் இந்த சேவை உள்ளது. ஆனால், இதற்கு மக்களிடையே வரவேற்பு இல்லை.

இந்த நிலையில், தற்போது சென்னையில் மீண்டும் பைக் டாக்சி சேவையை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  அதற்கான நிபந்தனைகள் வெளியிட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வணிகநோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பைக் டாக்சிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான தமிழ்நாடு போக்குவரத்துத் துறை புதிய விதிகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்கி உள்ளது.

இது நடைமுறைக்கு வந்தவுடன்,  பைக் டாக்சி சேவை வழங்கும், நிறுவனங்கள் ரூ.6 லட்சம்  முதல் 10 லட்சம் வரை உரிமக் கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும் என்றும்,  ஓட்டுநர்களை நியமித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தள்ளத.  அதன்படி,

  • ரேபிடோ பைக் டாக்சி சேவையை தொடங்க விரும்பும் நிறுவனம் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரைவர்களுக்கு, முறையான பயிற்சி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
  • பைக் டாக்கி சேவை டிரைவர்களுக்கு நல்ல உடல்நலத்துடன் இருப்பதுடன், அவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் முதல் 10லட்சம் வரையிலான இன்சூரன்சு எடுத்திருக்க வேண்டும்.
  • பைக் டாக்கி  டிரைவர்கள் வாகன ஓட்டுநர் லைசென்ஸ் எடுத்திருப்பதுடன் குறைந்தபட்சம் 2 ஆணடுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பைக் டாக்கி சேவை டிரைவருக்கு அதிகபட்சமாக 12மணி நேர சேவை மட்டுமே வழங்கப்பட வேண்டும் 

இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே செயலில் உள்ள ரேபிடோ பைக் டாக்சி சேவைக்கு சென்னை மக்களிடையே போதுமான வரவேற்பு இல்லாத நிலையில், தற்போது தமிழக அரசு மீண்டும் பைக் டாக்சி சேவை செய்ய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ற்கனவே செயலில் உள்ள ரேபிடோ பைக் டாக்சிசேவை என்பது,  இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட இரு இடங்களுக்கு இடையில் பயணிக்கும் போது, பின் இருக்கைக்கு பயணியை வாடகைக்கு அழைத்துச் செல்ல முடியும். இதற்கு  ரேபிடோ எனும் செயலியையும், இணைய தளத்தையும் தெலங்கானாவைச் சேர்ந்த ரோப்பன் என்ற தனியார் நிறுவனம்  கடந்த 2015ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறது.  முதலில் சென்னை உள்ளிட்ட ஆறு நகரங்களில் வாடகை பைக்டாக்சி சேவையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது ரேபிடோ பைக் டாக்சி சேவை 100 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ரேபிடோ பைக் டாக்கி சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள், நேர அடிப்படையில் பைக்டாக்சியை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம். உதாரணமாக பைக்டாக்சியை ஒரு மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம். இப்படி வாடகைக்கு அமர்த்திக்கொள்ளும் நேரம் முழுவதும், ரேபிடோ கேப்டன் (ஓட்டுனர்) தனது பைக்குடன் வாடிக்கையாளருடன் இருப்பார். இந்த நேரத்தில் வாடிக்கையாளர் தான் செல்ல விரும்பும் இடங்களுக்கு பயணம் செய்யலாம். ஒரே ரைடில் பல்வேறு இடங்களுக்குச் சென்று வேலைகளை முடித்துக்கொள்ள உதவும் வகையில் இந்த வசதி அமைகிறது. வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு இடத்திற்கு செல்லவும் தனியே பைக்டாக்சி புக் செய்து, அதற்காக காத்திருக்கும் அவசியம் இல்லாமல், தேவையான கால அளவிற்கு பைக் டாக்சியை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால், ரேபிடோவின்  செயலிக்கும், இணையதளத்திற்கும் தடை விதிக்கக் கோரி கால் டாக்சி ஓட்டுனர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தது. இதையடுத்து,  மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ரேபிடோ செயலிக்கும், இணைய தளத்திற்கும் தடை விதித்து ஜூலை 18 ம் தேதி உத்தரவிட்டார். பின்னர், இந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டனர். அதேபோல, செயலியை நீக்கும்படி கூகுள், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு சைபர் குற்றப் பிரிவு உதவி ஆணையர் அனுப்பிய கடிதத்திற்கும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.