தமிழக விளைாயட்டு வீராங்கனைகளைத் தாக்கிய வட இந்திய அதிகாரிகள்!

Must read

டில்லி:

தமிழக வீரர் வீராங்கனைகள் மீது  வட இந்திய அதிகாரிகள்தாக்குதல் நடத்திய சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டில்லியில் தேசிய கையெறி பந்து போட்டி நடந்து வருகிறது. இதன்  காலிறுதிச் சுற்றில், சத்திஸ்கர் மற்றும் தமிழ்நாடு அணிகள் மோதின. இந் போட்டியில் நடுவர்கள் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சத்திஸ்கர் அணிக்கு சாதகமாக நடந்துகொண்டனர்.

இந்த முறைகேட்டை தமிழக அணியினர் சுட்டிக்காட்டி, நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   அப்போது திடீரென மைதானத்தில் இருந்த தமிழக வீரர்களையும், வீராங்கனைகளையும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்களே அடித்து உதைத்து தாக்கினர்.

இது குறித்து தமிழக அணியின் பயிற்சியாளர் ஆசீர் வேதனையை தெரிவித்தார். அவர், “இந்த கையெறி பந்து போட்டியில்  ஆரம்பத்தில் இருந்தே தமிழக அணிக்கு எதிராக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். விளையாட்டு ஒருங்கிணைபாளர்களின் உதவியுடன் நடுவர்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். கடந்த ஆண்டுகளிலும் இப்படித்தான் நடந்தது” என்றார்.

அணி வீரர்கள், “தமிழக வீரர்கள் என்றில்லை.. ஆந்திரா, கர்நாடகா என்று தென்னிந்தியாவில் இருந்து செல்லும் விளையாட்டு அணிகளை, வடநாட்டு அதிகாரிகள் எதிரியாகவே பார்க்கிறார்கள். ஒருதலைபட்சமாகவே நடத்துகிறார்கள்.

மிழக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட ஏற்பாடு செய்யவில்லை” என்று வீரர்கள் தெரிவித்தனர்.

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article