சென்னை: தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய பிளஸ்2 தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்‘ சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுளளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே கடந்த மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் காரணமாக இந்த தேர்வு முடிவுகள் தள்ளிப்போகும் என்று தகவல் வெளியானது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அக்கட்சியின் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கி உள்ளதால், பிளஸ்2 தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் இருந்து கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in இணையதளத்தில் பார்க்கலாம். மேலும், 7845 252525 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு 14417, 104, 14416 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
முன்னதாக, தேர்வு முடிவுகளை வெளியிட மாநில அரசின் ஒப்புதல் தேவை என்பதால், தாமதம் ஆவதாகவும் புதிய் அரசு அமைந்தபிறகு, தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியானது. தற்போது, தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]