சென்னை:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 18ம் தேதி சட்டசபை கூடுகிறது.

அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபைக் குழு தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
பதவியேற்பைத் தொடர்ந்து அடுத்து 15 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நாளை மறு நாள் (18ம் தேதி) சட்டசபை கூட்டப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் முதல்வர் பழனிச்சாமி.
ஆட்சியைப் பிடித்த பின்னரும் கூட அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Patrikai.com official YouTube Channel