முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்று இரவு திடீரென சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மது சூதனன் உட்பட அதிமுக தலைவர்கள் வந்திருந்தார்கள்.

அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம் பேசினார்.

அப்போது, “ஜெயலலிதா 2011ல் சசிகலாவையும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் போயஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றினார்., மூன்று மாதங்களுக்குப் பின்னால் சசிகலாவை மட்டும் அனுமதித்தார். அதுவும், “எனக்கு உதவியாக இருப்பதற்கு. சசிகலாவை மட்டும் அனுமதிக்கிறேன். அவரது குடும்பத்தில் எவரையும் நான் வீட்டினுள் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் அனைவரையும் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினரில் இருந்தும் விலக்கி வைக்கிறேன்” என்றார்.

அவர் மறையும் வரை. சசிகலாவின் உறவினர்களை சேர்க்கவே இல்லை.
ஆனால் இன்றைக்கு அவர்கள்தான் அங்கே முன்னனியில்இருக்கிறார்கள்.அவர்கள்தான் தலைமையாம். இன்று பதவி ஏற்றிருக்கிற ஆட்சி, அம்மா அவர்களுடைய உண்மையான விசுவாசிகளின் ஆட்சி இல்லை. சசிகலா குடும்ப ஆட்சிதான்.

இந்த ஆட்சியை நீக்கி, மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் என்று சமாதியில் சபதம் ஏற்கிறோம். நாளை முதல், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இருக்கும் தொகுதிகளில் வாக்காளர் பேரணி நடக்கும். அந்தந்த எம்.எம்.ஏக்கள் சரியான முறையில் நம்மிக்கை வாக்கெடுப்பில் ஓட்டளிக்க வேண்டும் வற்புறுத்தி, மக்கள் பேரணி நடத்துவார்கள்” என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார்.

பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், ”நாளை மறுதினம் பெரும்பான்மையை நிரூபிக்கிறார்களாம். கடந்த பத்து நாட்களாகவே நடப்பவை எதுவும் சரியாக இல்லை.
இன்று 124 ச.ம.உ.றுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஏழரை கோடி மக்களும் எங்களைத்தான் ஆதரிக்கிறார்கள். தொண்டர்களோ, மக்களோ அவர்களை விரும்பவில்லை. இந்த ஆட்சி சிறிது காலத்தில் தூக்கி எறியப்படும். இந்த மக்கள் விரோத ஆட்சி. இதை அகற்றும் வரை ஓயமாட்டோம்” என்றார்.