1
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் ஸ்தம்பித்துப் போயிருந்த தமிழகம் இன்றே இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது.
2
நீண்ட நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு 11.30க்கு மரணமடைந்தாதக, மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
அதற்கு முன்பு மாலையிலேயே  சில தொலைக்காட்சிகளில் ஜெயலலிதாவின் மரணம் உறுதிப்படுத்தப்படாத தகவலாக வெளியானது.  இதையடுத்து தமிழகம்முழுதும் பதட்ட நிலை ஏற்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான வாகனங்கள் ஓடவில்லை. இயங்கிய சில பேருந்துகள் மீது சில ஊர்களில் கல் வீச்சுகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதன் பிறகு, தொலைக்காட்சி செய்தி தகவல் தவறு என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. நிலைமை ஓரளவு அமைதியானது. ஆனால் அன்று நள்ளிரவே, ஜெயலலிதா மரணமடைந்தாதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
3
இதையடுத்து, தமிழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்குமோ என்று மக்கள் பயந்தனர். ஆனால் காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு தமிழகம் முழுதும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது.
5
நேற்று காலை முதல் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்களும்,அரசியல் தலைவர்களும் சென்னை வந்தனர். அப்போதும், சென்னை காவல்துறை சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மாலை ஆறு மணியில் இருந்தே சில கடைகள் திறக்கப்பட்டன. ஓரளவு வாகன போக்குவரத்தும் இருந்தது.
இன்று காலை முதல் முழுவதுமாக தமிழகம் இயல்பு நிலைக்கத்திரும்பியது.  அதிகாலையிலேயே வழக்கம்போல தேநீர் கடைகள், பத்திரிகை விற்கும் கடைகள், பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டன. பிறகு காய்கறி கடைகள், மருந்துக்கடைகள் திறக்கப்பட்டன.
மேலும் அதிகாலை முதலே சென்னையில் மாநகரப்பேருந்துகள் இயங்கின. வெளியூர்களிலும் அரசுப்பேருந்துகள் இயங்க ஆரம்பித்தன.
சில தனியார் நிறுவனங்கள் நேற்றும் இன்றும் விடுப்பு என்று முன்கூட்டியே அறிவித்திருந்தன. இப்போது இன்று அலுவலகம் இயங்கும் என்று ஊழியர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.
பெருந்திரளான தொண்டர்களுக்கு பாசமிகு தலைவராக விளங்குபவர் மறைந்தால், விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும் என்பது தமிழக வரலாறு.
ஆனால் ஜெயலலிதாவின் மறைவின்போது அப்படியான சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை.
தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த காவல்துறையினரையும்  மற்றும் அமைதி காத்த அ.தி.மு.க. தொண்டர்களையும் மக்கள் நன்றியுடன் நினவுகூறுகிறார்கள்.