சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி- தமிழக அரசு அறிவிப்பு

Must read

சென்னை-

லங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நேற்றிரவு  நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரது படகில் சென்ற கெம்பலோத் என்பவரது மகன் பிரிட்சோ என்ற மீனவர் குண்டு பாய்ந்து பலியானார்.

அவரது கழுத்தில் குண்டு பாய்ந்து இருந்தது. இதேபோல் கிளிண்டன் என்ற மீனவர் குண்டுக்காயம் அடைந்தார்.  இதையடுத்து தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்சோ குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியும் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதனிடையே சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிதியளித்து, படுகாயமடைந்த மீனவர்களுக்கும் உயர்தர சிகிச்சை அளித்து காப்பாற்ற அ.தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

More articles

Latest article