சென்னை; ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தமிழகஅரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் காரணமாக, இந்த மசோதா உடனடி அமலுக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்துடன் தொடர்புடைய விளையாட்டுகளால் பலர் ஏமாற்று தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில்,அதை தடுக்க புதிய மசோதா கொண்டு வரப்படும் என திமுக அரசு அறிவித்து, அதற்கான சட்ட நுணுக்கங்கள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது. இந்த குழுவினர் கொடுத்த பரிந்துரையை ஏற்று தமிழகஅரசு, புதிய மசோதா உருவாக்கியது. இந்த மசோதாவை சட்டப்பேரைவையில் நிறைவேற்றி, அதை ஆளுநர் ஒப்புதலுக்கு தமிழக சட்டப்பேரவை அனுப்பியது. அதைத்தொடர்ந்து, கடந்த செப்.26-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஓராண்டில் 27 தற்கொலைகள்: ஆன்லைன் சூதாட்டம் தடை குறித்து திமுகஅரசுக்கு ராமதாஸ் கேள்வி…