சென்னை: ‘நீட்’ தேர்வு குறித்து ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தமிழகஅரசு அமைத்துள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. இந்த ஆண்டு 1முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஆல்பாஸ் அறிவித்துள்ள நிலையில், மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழகஅரசு இன்று உயர்அதிகாரிகளுடன் ஆலேசானை நடத்தியது.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இந்த குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைவராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.  அவரது தலைமையில் மேலும் 8 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

 தலைவர்:

1) ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன்

உறுப்பினர்கள்:

2) டாக்டர் ஜி.ஆர்.ரவிந்திநாத் 

3) டாக்டர் ஜவஹர் நேசன்

4) அரசு முதன்மைச்செயலாளர், மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை

5) அரசு முதன்மைச்செயலாளர், பள்ளிக்கல்வித்துறை

6) அரசுச் செயலாளர், சட்டத்துறை

7) அரசு முதன்மைச்செயலாளர், சிறப்பு பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

8) இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்கம்,

9) கூடுதல் இயக்குநர், மருத்துவக்கல்வி இயக்கம், செலர் தேர்வுகுழு