சென்னை:

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.1,652 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

பவானி ஆற்றில் உபரி நீரை கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும் திட்டமாக, அத்திக்கடவு – அவிநாசி திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற பல ஆண்டு காலமாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது இத்திட்டத்துக்கு தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் 30 பொதுப்பணித்துறை குளங்கள், 41 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 630 குட்டைகளுக்கு நீர் வழங்கப்படும். இதற்காக ரூ.1,652 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது