சென்னை

சென்னை கே கே நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் மாணவரை சேர்க்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசால் நடத்தப் படுபவை.   இந்தப் பள்ளிகளில் கல்வித் தரம் சிறப்பாக இருப்பதால் இங்கு மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.    இந்த கேந்திரியா வித்யாலயாவில் இடம் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

சென்னை கே கே நகரில் அமைந்துள்ள இந்தப் பள்ளியின் முதல்வராக ஆனந்தன் பணி புரிந்து வருகிறார்.   இவர் தனது ப்ள்ளியில் முதல் வகுப்பில் ஒரு தலித் மாணவரை இட ஒதுக்கிட்டில் சேர்க்க ரூ. 1 லட்சம் லஞ்சம் கேட்டதாக சொல்லப் படுகிறது.   மாணவரின் பெற்றோர்கள் சிபிஐ அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்தனர்.

மாணவரின் பெற்றோரிடம் ஆனந்தன் ரூ.1 லட்சம் லஞ்சம் பெறும் போது சிபிஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.   கைது செய்யப்பட்ட ஆனந்தனிடம் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடந்து வருகிறது.    ஆனந்தன் ஏற்கனவே இதுபோல லஞ்சம் வாங்கி இருக்கலாம் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பள்ளி முதல்வர் ஆனந்தன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.