சென்னை:

முதல்வர் எடப்பபாடிபழனிச்சாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சட்டமன்ற கூட்டத்தொடர் மானிய கோரிக்கைகள், தண்ணீர் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தமிழக சட்டமன்றம்  வருகிற 28ந் தேதி கூடுகிறது. அப்போது துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று உறுப்பினர்கள் பேசியபின், அமைச்சர்கள் அவற்றுக்கு பதிலளித்து அறிவிப்புகளை வெளியிடுவார்கள். மேலும் திமுக கொடுத்துள்ள சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஜூலை 1ந்தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது குறித்தும், தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினை குறித்தும்  ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும்,  பேரவையில் புதிய அறிவிப்புகள் வெளியிடுவது, அதற்காக எவ்வளவு நிதி ஒதுக்குவது என்பது குறித்தும், மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தமிழக சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது?, எந்தெந்த நாட்களில் எந்த துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்துவது? என்பது குறித்து ஆலோசிப்பதற்காக, அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.