தமிழக அமைச்சரவை மாற்றமா? அரசியல் பரபரப்பு….

Must read

தமிழக அமைச்சரவை மாற்றமா?
நெட்டிசன்
தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
vidyasagar-rao
தமிழக முதல்வர் கடந்த 22ந்தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலை பற்றிய வதந்தி அவ்வப்போது வெளிவிந்து பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
இதற்கிடையில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசகர் முதல், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரை அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வந்து ஜெயலலிதாவை பார்க்காமல், மருத்துவர்களை பார்த்து விட்டு, ஜெயலலிதா விரைவில் குணமடைவார் என்று சொல்லி செல்கிறார்கள்.
நேற்று அப்பல்லோ வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதா நீண்ட காலம் சிகிச்சை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனை சிகிச்சையில் இருப்பதால், அரசு நிர்வாகம் முடங்கி போய் உள்ளதாக தலைவர்கள் சொல்கிறார்கள். அதன் காரணமாக அமைச்சரவை மாற்றம் அல்லது துணைமுதல்வர் பதவி பிரமாணம் ஏதும் நடைபெறலாம் என தெரிகிறது.
இதுகுறித்து முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் கூடி ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
இதற்கிடையில் சுப்பிரமணியசுவாமி, தமிழக அரசை கலைத்துவிட்டு ஆளுநரின் கீழ் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்று இன்று கூறியுள்ளார்.
tn
இந்த பரபரப்பான சூழலில்,  தமிழக தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் அவசர அவசரமாக  ஆளுநரை  கிண்டி ராஜ்பவன் சென்று  சந்தித்துவிட்டு வந்தார். இதன் காரணமாக சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.
தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பின் பேரில் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் இன்று பிற்பகல் கவர்னர் மாளிகை சென்றார். இருவரும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியுள்ளனர்.
அப்போது தலைமை செயலாளர் என்ற முறையில் எல்லா துறை பைல்களையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல் இருப்பதால், அவர் குணமாகும் வரையில் தற்காலிக முதல்வர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கவர்னர் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக கவனர் அதிமுக தலைமைக்கு கடிதம் எழுதி இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் சொல்கிறது.
அந்த கடிதத்தில் இன்னும் ஒரு வார காலத்துக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.
ஒருவேளை புதிய தலைவர் தேர்வு செய்ய முடியாமல் போனால் கவர்னர் ஆட்சியை கொண்டு வர திட்டமிருப்பதாகவும் சொல்லப்படுகிறது
ஆனால் அனைத்து அமைச்சர்களையும் ஆளுநர் மாளிகை வர சொல்லி கவர்னர் உத்தரவிட்டதாகவும் தெரிகிறது.
இதற்கிடையில் கவர்னர் இன்று மாலை மீண்டும் அப்பல்லோ மருத்துவமனை வந்து முதல்வர் உடல்நிலை குறித்து அறிய இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
இதன் காரணமாக அரசியலிலும், அரசியல்வாதிகளிடமும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More articles

Latest article