சென்னை:
மிழக சட்டசபையில் 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழக மாநில கடன் 2.5லட்சம் கோடியாக இருப்பதாக தெரிவித்தார்.  மேலும் டாஸ்மாக் கடை மூடல்,  இலவச மின்சாரத்தால் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் இந்த பட்ஜெட்டில் புதிதாக வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
budget_jaya1
பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் :

  • லோக் ஆயுக்தா அமைக்க நடவடிக்கை
  • மின்துறைக்கு ரூ.13,856 கோடி மானியம் வழங்கப்படுகிறது.
  • நலத்திட்ட, மானியங்களுக்கு ரூ.68,211.50 கோடி நிதி ஒதுக்கீடு
  • பால்வளத்துறைக்கு ரூ. 121.69 கோடி ஒதுக்கீடு
  • தோட்ட கலைத்துறைக்கு ரூ.518.19 கோடி ஒதுக்கீடு
  • பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு ரூ. 208 கோடி ஒதுக்கீடு
  • எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகை ரூ.1,429.04 கோடி ஒதுக்கீடு
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த வருடத்தைவிட, இந்த வருடம் ரூ. 2,163.24 கோடி அதிகரிப்பு
  • பள்ளி கல்வித்துறைக்கு ரூ.24.130 கோடி நிதி ஒதுக்கீடு
  • பள்ளிகளில் கழிப்பறை தூய்மை பணிகள் மேற்கொள்ள ரூ.333.61 கோடி ஒதுக்கீடு
  • கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ.233 கோடி ஒதுக்கீடு
  • உயர்கல்வித்துறைக்கு ரூ. 3,679.01 ஒதுக்கீடு
  • சுகாதாரத்துறைக்கு 9073 கோடி நிதி ஒதுக்கீடு
  • உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.183.24 கோடி ஒதுக்கீடு
  • தேசிய சுகாதார திட்டத்திற்கு38 கோடி ஒதுக்கீடு
  • தீவன உற்பத்தி திட்டத்திற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு
  • கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1,189.97 கோடி ஒதுக்கீடு
  • சமூக நலத்துறைக்கு ரூ.4,512.32 கோடி ஒதுக்கீடு
  • அணைகள் புணரைமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.258.46 கோடி ஒதுக்கீடு
  • சுற்றுச்சூழல் மற்றும் வனததுறைக்கு ரூ.65278 கோடி ஒதுக்கீடு
  • வேளாண்துறைக்கு ரூ.1680.73 கோடி ஒதுக்கீடு
  • மீன்வளத்துறைக்கு ரூ. 743.79 கோடி ஒதுக்கீடு
  • சுற்றுலாத்துறைக்கு ரூ.85.80 கோடி ஒதுக்கீடு
  • கைத்தறித்துறைக்கு ரூ.1129 ஒதுக்கீடு
  • தொழில்துறைக்கு ரூ. 2104.49 கோடி ஒதுக்கீடு
  • நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.1220.28 கோடி ஒதுக்கீடு
  • வனத்துறைக்கு ரூ.652.78 கோடி ஒதுக்கீடு
  • நீர்வள ஆதாரத்துறை ரூ.3406.69 கோடி ஒதுக்கீடு
  • தோட்டக்கலைத்துறைக்கு ரூ.518.19 கோடி ஒதுக்கீடு
  • சாலை மேம்பாட்டு திட்டங்களுக்குரூ.1230 கோடி ஒதுக்கீடு
  • சாலை பாதுகாப்புக்கு ரூ.165 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • வருவாய்த்துறைக்கு ரூ.5683 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • புதிய எரிசக்தி திட்டத்திற்கு ரூ.23,856 கோடி ஒதுக்கீடு
  • தீயணைப்புத்துறைக்கு ரூ.2307 ஒதுக்கீடு
  • தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.94 கோடி ஒதுக்கீடு
  • ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.21,186.58 கோடி ஒதுக்கீடு
  • பண்ணை இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம்
  • பிரதம மந்திரி பயிர்காப்படு திட்டத்திற்கு மாநில அரசின் பங்காக ரூ.239.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • கறவை பசுக்கள் அலகுத்தொகை ரூ.35 ஆயிரமாக உயர்வு
  • 12 ஆயிரம் பேருக்கு 12000 கறவை பசுக்கள் வழங்கப்படும்.
  • ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 4 லட்சம் வெள்ளாடுகள்/ செம்மறியாடுகள் வழங்கப்படும்
  • மதுரையில் ரூ.45 கோடி செலவில் புதிய பால் பொருள் தயாரிக்கும் அலகு அமைக்கப்படும்
  • மீன்பிடி தடைகால நிவாரண நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு
  • இலவச அன்னதான திட்டம் மேலும் 30 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்
  • 2வது மெட்ரோ ரயில் திட்டத்ததிட்ட அறிக்கை விரைவில் தயாரித்து செயலாக்கப்படும்
  • வனவிலங்குகள் ஊருக்குள் புகுவுதை தடுக்க நடவடிக்கை
  • ஒட்டன்சத்திரம் திருப்பூர் நெல்லை கொல்லம் அரசு தனியார் கூட்டு பங்களிப்பு முறையில் 4 வழிச்சாலையாக்கப்படும்
  • சேலம் 5 சாலை சந்திப்பில் மேம்பால பணிகள் துரிதப்படுத்தப்படும்
  • 2016ம் ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் கார்டு அட்டை வழங்கப்படும்
  • இணையதளம் வாயில் ரேசன் கார்டு முகவரி மாற்றம்
  • மின்சார தேவைக்கும்உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி சரிசெய்யப்பட்டுள்ளது.
  • அடுத்த 5 ஆண்டில் 18500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்
  • வருவாய் பற்றாக்குறை ரூ. 15854.47 கோடி
  • அடுத்த ஒராண்டில்35 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள்
  • ஓராண்டில் சூரிய சக்தி மின்சக்தியுடன் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்
  • ஆறுகள் புத்துயிர்த்திட்டத்தின் கீழ் ரூ.24.58 கோடி செலவில் வைகை, நொய்யலாறுகள் தூர்வாரப்படும்
  • ரூ.52.64 கோடி செலவில் ஆற்றின் கரையோரங்களில் மரம் வளர்க்கப்படும்
  • சாலை பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்படும்
  • கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ரூ.355.81 கோடி ஒதுக்கீடு
  • அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்
  • அடுத்த ஓராண்டில்50 லட்சம் இலவச வீட்டுமனைபட்டா வழங்கப்படும்
  • ரூ.422 கோடி செலவில் 2,673 வீடுகள் போலீசாருக்கு கட்டித்தரப்படும்
  • போலீஸ் துறைக்கு மொத்தமாக ரூ.6102.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • காவல்துறை நவீனமாயக்கலுக்கு ரூ.68.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
  • .நகர்ப்புற வாழ்வாதார திட்டங்களுக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு
  • இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு
  • 2 கோடி நபர்களுக்கு திறன் பயிறசி அளிக்க திறன் மேம்பாட்டு கழககம் அடைமக்கப்பட்டுள்ளது.
  • மாநில சமச்சீர வளர்ச்சி நிதியம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
  • நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்டத்திற்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு
  • சாலை பாதுகாப்புக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு
  • 8 கிராம் தங்கம் திட்டத்திற்கு ரூ.703.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இலங்கை அகதிகள் நலனுக்கு 105 கோடி
  • மாற்றுத்தினாளிகளுக்கு ஆயிரம் இருசக்கர வாகனங்கள் இலவசமாக வழங்கப்படும்
  • மாற்றுத்திறனாளி நலனுக்கு ரூ. 396.74 கோடி
  • சிறுபான்மையினர் மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு
  • 100 யூனிட் இலவச மின்சாரத்தால் ரூ.1,607 கோடி இழப்பு
  • 500 டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் ரூ.6,636.08 கோடி இழப்பு
  • 7 வது சம்பள கமிஷனை அமல்படுத்த உயர்நிலை குழு
  • அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்
  • சிறைச்சாலைத்துறைக்கு ரூ.282.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நீதி நிர்வாகத்திற்கு24 கோடி ஒதுக்கீடு
  • 2000 புதிய பஸ்கள் வாங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு
  • கூட்டுறவு வங்கி மூலம் ரூ.6000 கோடி அளவுக்கு புதிய பயிர்க்கடன் வழங்கப்படும்