1496951773images
சென்னை: 
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-17ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை தாக்கல்  செய்தார் நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம். அறிக்கையை தாக்கல் செய்யும் முன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து நீண்ட கவிதை (போன்ற ஒன்றை) படித்தார்.
அது…
“கனிவு தந்த உடையாக
இரக்கத்தின் திருமகளாக
ஈகைக்கே இலக்கணமாக
மக்களுக்காகவே உதிக்கின்ற மாசறு இதயமாக
மானிட உடையில் வாழுகிற மனித தெய்வமே
மாதவத்தில் வாழுகின்ற தயாகத்தின் சொரூபமே
புடம் போட்ட தங்கமாக புனித ஜார்ஜ் கோட்டையில்
6ம் முறையாக தமது ஆற்றல் கரங்களில் அரசாட்சி செங்கோல் ஏந்தி ஆட்சி செய்யும் அம்மா என்னும் சிங்கமே
புத்தனைப் போல் பொறுமை காத்து
10 கோடி தமிழர்களின் இதயத்தில் நங்கூரமிட்டு அமர்ந்திருக்கும் எங்கள் அம்மவே
வெற்றிகளுக்கே விலாசமாகிய வீரத்திருமகளே.. “
இதை நிறுத்தி நிதானமாக கவிதைத் தொனியில் ஓ.பி.எஸ். படித்த விதம் ஆளுங்கட்சியினரை ரசிக்க வைத்தது.