யாழ்ப்பாணம்,

காணாமல் போன தமிழர்களின் நிலை குறித்து தொடரப்பட்ட வழக்கில், இலங்கை ராணுவ தளபதி நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில், தமிழர்களுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையே வெகுகாலமாக மோதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், 1996-ம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் 24 பேரை சிங்கள ராணுவம் பிடித்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் என்ன ஆனார்கள், அவர்களி நிலை என்ன என்பது குறித்து தமிழர்கள் சார்பாக யாழ்ப்பாணம் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள நவட்குலி பகுதியை சேர்ந்த இளைஞர்களை சிலரை கடந்த 1996-ம் ஆண்டு ஜுலை மாதம் ராணுவம் கைது செய்தது. அவர்களின் கதி என்ன ஆனது? என்பது தெரியாத நிலையில், மாயமான 24 பேரின் குடும்பத்தார் இதுதொடர்பாக யாழ்ப்பாணம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த 15-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன், இது தொடர்பாக இலங்கை ராணுவ தலைமை தளபதி மகேஷ் சேனநாயகே மற்றும்  அரசு உயரதிகாரிகள் நாளை (18-ம் தேதி) நேரில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.