உலக தமிழர்களை இணையம் வாயிலாக தமிழால் இணைத்த ‘தகடூர் கோபி’ காலமானார்

Must read

தர்மபுரி,

மிழ் எழுத்துக்களை இணையம் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலப்படுத்தி, உலக தமிழர்களிடையே தமிழை வளர்த்தும், உலகில் உள்ள அனைவரும் வலைளதளங்களில் தமிழி வாசிக்கும் வகையில், யுனிகோடு எனப்படும் இணையதள  முறைக்கு எழுத்துக்களை மாற்றி வடிவமைத்ததில் ஒருவரான தகடூர் கோபி எனப்படும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த த.கோபாலகிருஷ்ணன் கடந்த ஞாயிறன்று காலமானார்.

இவருக்கு மனைவி மற்றும்  மகன், மகள் உள்ளனர்.

42வயதே ஆன பொறியியல் பட்டதாரியான அவரது மறைவு தமிழ் இணைய பயன்பாட்டாளர்களுக்கும், இணை வழி அறிஞர்களுக்கும்  பெரும் இழப்பாகும்.

கோபி ஏற்கனவே பல்வேறு நாடுகளில் மென்பொருள் துறையில் பணியாற்றி உள்ளார். இணைய உலகில் தமிழ் குறித்து பணியாற்றுபவர்களிடையே கோபி மிகவும் பிரபலமானவர்.

ஏற்கனவே,  அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹைகோபி போன்ற பெயர்களில் தலைதளங்கள் உருவாக்கி பல சொல் மாற்றி, எழுத்துக்கள் மாற்றி போன்ற சாப்ட்வேர்களை உருவாக்கி அனைவரும் பயன்படும் வகையில் பதிவேற்றி உள்ளார்.

மற்ற பான்ட் எனப்படும் எழுத்துக்களில் தட்டச்சு செய்யப்படும் தகவலை இதுபோன்ற இணைய மாற்றி (Unicode Convertors) மூலம் யுனிக்கோடு பான்டாக மாற்றி வலைதளத்தில் பதிவேற்றும் வகையில் அவர் தகடூர் என்ற பெயரில் தமிழ் கன்வெர்ட்டரை தயாரித்துள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதுபோல, உமர் என்ற பல மொழிகள் மாற்றி, கோதாவிரி என்ற பெயரில் தெலுங்கு மாற்றி, சேரன் என்ற பெயரில் மலையாளம் மாற்றி, காவேரி என்ற பெயரில் கன்னட மாற்றி, காந்தி என்ற பெயரில் குஜராத்தி மொழி மாற்றி, கலிங்கா என்ற பெயரில் ஒரியா மொழி மாற்றி, குரு என்ற பெயரில் பஞ்சாபி மொழி மாற்றியும், மகாகவி என்ற பெயரில் பெங்காலி மொழி மாற்றியும் உருவாக்கி தனது வலைதளத்தில் பதிவேற்றி உள்ளார்.

இவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியதாகவும், அவரது உடல் சொந்த ஊரான தர்மபுரிக்கு கொண்டு வரப்பட்டு, நேற்று பகல் இறுதி சடங்கு செய்யப்பட்டது.

இவர் குறித்து மேலும் தகவல் பெற அவரது இணைய தளத்தை கிளிக்குங்கள்….

http://www.higopi.com/

More articles

Latest article