சென்னை: தமிழ்நாட்டில் 87 % பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் காணப்படுவதாக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்டு மாதங்கள் வரை நடத்தப்பட்ட செரோ சர்வேயில், ஒட்டுமொத்த செரோபிரெவலன்ஸ் 70 சதவிகிதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 88 சதவிகிதமாக உயர்ந்தும், குறைந்த பட்சமாக கரூர் மாவட்டத்தில் 51% செரோபோசிட்டிவிட்டி இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ‘பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள ஆய்வு தகவலில் 87 % பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் காணப்படுவதாக தெரிவித்து உள்ளது. 4வது முறையாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் இவை கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது கொரோனா மூன்றாவது அலையின் தொடக்கத்திற்கு முன்னதாக, டிசம்பர் 2021 கடைசி வாரத்தில் செரோசர்வே எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளது.
அதிகபட்சமாக திருவாரூரில் 93 சதவிகிதம் என்ற அளவிலும், மதுரையில் 91%, சென்னையில் 88%, வேலூர் 86% என்ற அளவில் உள்ள நிலையில் குறைந்த பட்சமாக திருப்பத்தூரில் செரோபோசிட்டிவிட்டி 82% இருப்பதாக தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் சோதனை செய்யப்படும் மாதிரிகளில் 97% ஒமிக்ரான்! ஆய்வு தகவல்…