சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா சோதனை செய்யப்படும் மாதிரிகளில் 97% மாதிரிகளில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்படுவதாக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் ஆய்வு தகவல் தெரிவித்து உள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் சற்றே குறைந்து வந்தாலும், கடந்த மாதம் ஏற்பட்ட 3வதுஅலையின்போது சற்றே அதிகரித்தது. இதையடுத்து, கல்வி நிலையங்கள் மூட உத்தரவிட்டதுடன் ஞாயிறு  மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், கட்டுப்பாடுகளை தீவிரமாக்கியதாலும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. மேலும் சோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டு, தொற்று பாதித்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

தற்போதுவரை  தமிழ்நாட்டில் 34,20,505 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 37,809 பேர் உயிர் இழந்துள்ளனர். அதே வேளையில் சிகிச்சை பெற்று இதுவரை 32,92,559 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 90,137 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை  6,27,59,697 மாதிரிகள்  பரிசோதனை செய்யப்பட்டு உள்ளத. நேற்று மட்டும் 1,15,898  மாதிரிகள் பரிசோதனை நடந்துள்ளது.   தினசரி 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மாதிரிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா 3வது அலையின் தாக்கத்தின்போது, (ஜனவரி 26ந்தேதி வரை) சோதனை நடத்தப்பட்ட மாதிரிகளில் 97 சதவிகிதம் பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரவல் இருந்தது கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம்  முழு ஜீனோம் வரிசைமுறை தரவு (Whole Genome Sequencing data) வெளியிடப்பட்டுள்ளது. அதில்,   97% மாதிரிகள் தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வகையைச் சேர்ந்தவை என்று கூறியுள்ளது. டெல்டா மாறுபாடு இப்போது 3% மாதிரிகளில் மட்டுமே காணப்படு கிறது. 97% மாதிரிகள் தமிழ்நாட்டின் முழு மரபணு வரிசை தரவுகளில் Omicron ஆகும்.

மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் டெல்டாவை ஓமிக்ரான் மாற்றுகிறது.