சென்னை: வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! “தமிழ்நாடா NDA-வா?” எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

மராட்டியத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை பாஜக நீக்கியுள்ளது. இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கவே பாஜக துடிக்கிறார்கள். இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு சிறுபான்மையினருக்கு எதிரான பாஜக அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசு என விமர்சித்துள்ளார்.

இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க! இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள்.

அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் திரு. அஜித் பவார் அவர்கள் 2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார். அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது.

சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க.! இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு #AntiMinorityBJP அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா?

தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி!

இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்.

இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! “தமிழ்நாடா NDA-வா?” எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!

இவ்வாறு கூறி உள்ளார்.