சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் என்ன என்பது குறித்து, தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மாநிலத்திலேயே அதிக பட்சமாக தருமபுரி மாவட்டம் பலக்கோட்டில் 87.33% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது குறைந்த அளவிலான வாக்குப்பதிவு  சென்னை வில்லிவாக்கம் தொகுதியாக உள்ளது.

 தமிழகத்தில் உள்ள  234 தொகுதிகளுக்கும் நேற்று (ஏப்ரல் 6ந்தேதி) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.  காலை 7 மணி முதல்  மாலை 7 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்து தோராயமாக மாநில தேர்தல் ஆணையம் நேற்று இரவு 7.1ஃ5 மணி அளவில் அறிவித்தது. அதன்படி,  தமிழகத்தில் 65.11% வாக்குகள் பதிவாகி இருப்பதாக கூறியதுடன், முழுமையான வாக்குப்பதிவு நாளை (இன்று) காலை வெளியிடப்படும் என தெரிவித்திருந்தது.

அ தன்படி இன்று தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு, வாக்குப்பதிவு சதவிகிதம் குறித்து தெரிவித்துள்ளார்.  அதன்படி தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், அதிகபட்டச வாக்குப்பபதிவு நடைபெற்றுள்ள பகுதி  தருமபுரி மாவட்டம் பலக்கோட்டில் 87.33% வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து, குமரி மாவட்டம்  குளித்தலையில் 86.15%  வாக்குப்பபதிவும், முதல்வர் போட்டியிடும் சேலம் மாவட்டம்  எடப்பாடி தொகுதியில்  85.6% வாக்குப்பதிவும், வீரபாண்டி  தொகுதியில் 85.53% வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளன.

தமிழகத்திலேயே  குறைவான அளவில் வாக்குகள் பதிவான தொகுதிகள் சென்னையிலேயே இடம்பெற்றுள்ளன.   சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவிகிதமும்,  தியாகராய நகர்  தொகுதியில் 55.92 சதவிகிதமும்,  வேளச்சேரி தொகுதியில்  55.95 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளன.