Skip to content
  • Mon. Sep 21st, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக மூதலீடுகளை பெற்றதில் தமிழகம் முதலிடம்..

Jul 16, 2020

சென்னை:

கொரோனா  ஊரடங்கால் தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காலக்கட்டத்தில்  நாட்டிலேயே அதிக புதிய முதலீடுகளை பெற்று தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தனியார் நிறுவன திட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


மும்பையில் உள்ள ‘புராஜக்ட்ஸ் டுடே’ என்ற திட்ட கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கை யின்படி, ஊரடங்கு நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களின் இடைக்காலத்தில் ரூ.97 ஆயிரத்து 859 கோடி முதலீடுகளுக்கான 1,241 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் அனைத்துப் பணிகளும் முடங்கிய நிலையில், மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறி யாகி உள்ளது. பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சிறுவணிகர்களின் தொழில் அடியோடு நசுங்கிவிட்டது. கோடிக்கணக்கானோர் வேலையிழந்து அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பல மாநிலங்களில் மீண்டும் பொருளாதார எழுச்சி பெறும் வகையில் பல்வேறு தொழில்சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நாட்டிலேயே அதிக முதலீடு பெற்ற மாநிலமாக தமிழகம் அறியப்பட்டுள்ளது.
 ‘புராஜக்ட்ஸ் டுடே’ என்ற திட்ட கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வடறிக்கை..
நாட்டிலேயே அதிக முதலீடுகளை பெற்ற  மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. தமிழக அரசு சமீபத்தில் ரூ.18 ஆயிரத்து 236 கோடி முதலீடுகளுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முதலிடம் பிடித்துள்ளது.
2வது இடத்தை மகாராஷ்டிரா மாநிலம் பிடித்துள்ளது. ரூ.11 ஆயிரத்து 229 கோடி அளவுக்கு புதிய முதலீடுகளைப் பெற்றுள்ளது.
அடுத்தபடியாக உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, குஜராத், ஒடிசா, ஆந்திர பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் வருகின்றன.
கடந்த ஆண்டு இதே மாதங்களில் ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 673 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான 2,500 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
“அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களில் பெரும்பாலானவை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் திட்டங்கள் என்றாலும், ஒரு சில தனியார் திட்டங்களும் உள்ளன, இது மார்ச் 2020 முதல் நாடு பூட்டப்பட்ட நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு சாதகமான அறிகுறியாகும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post navigation

தமிழக பா.ஜ.க.வில் மேலும் பல சினிமா பிரபலங்கள்..
பிளஸ்2 மறுதேர்வு எழுத-மறுகூட்டல் விண்ணப்பிப்பது எப்போது?

Related Post

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer