சென்னை: கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் உயர்ந்து நிற்கிறது என்றும், நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக நிற்கிறது என்று கூறிய முதல்வர், “தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்காக ஆண்டுதோறும் 3 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்கிறது. அத்தகைய சீரான நிதி ஒதுக்கீடுதான் பல்கலைக்கழங்கள் இந்தளவுக்கு சிறப்பாக செயல்பட காரணம் என துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கான மாநாடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இதில் விடுதலைக்கு முன் உருவாக்கப்பட்டவை இரண்டே பல்கலைக்கழகங்கள்தான். சென்னைப் பல்கலைக்கழகம் 1857-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில், 18 நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. தலை சிறந்த 100 பல்கலைக்கழகத்தில் 21 தமிழகத்தில் உள்ளன. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 31 தமிழகத்தில் உள்ளன. தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளது. தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. தலைசிறந்த 100 மேலாண்மை கல்வி நிறுவனங்களில் 11 தமிழகத்தில் இருக்கிறது. தலைசிறந்த 100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8 தமிழகத்தில் இருக்கின்றன.

1947 முதல் 1967-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் உருவாக்கப்பட்டது. அது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம். மற்ற 19 பல்கலைக்கழகங்களும் 1967-க்குப் பிறகு அதாவது திராவிட அரசுகள் அமைந்த இந்த 50 ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு உயர் கல்வியில் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதற்கு இதுவே மிகமிக முக்கியச் சான்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

1857-ல் தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் மற்ற மாநிலங்களில் பல்கலைக்கழகங்களைத் தொடங்க முன்மாதிரியாக இருக்கிறது. மேலும் தனித்தனி சிறப்புதுறைகளுக்கு பல்கலைக்கழகங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகங்களுக்காக ஆண்டுதோறும் 3 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்கிறது. அத்தகைய சீரான நிதி ஒதுக்கீடுதான் பல்கலைக்கழங்கள் இந்தளவுக்கு சிறப்பாக செயல்பட காரணம். தமிழ்நாடு இந்தியாவில் உயர் கல்வி சிறந்து விளங்கும் மாநிலம் என்பதை அனைவரும் அறிவர்.

கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். நீதிக்கட்சிக் காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்கெல்லாம் காரணம். ஒருவருக்கு கல்வியை மட்டும் கொடுத்துவிட்டால் மிகப்பெரிய சொத்தாக அது அமைந்துவிடும். அத்தகைய கல்வி சொத்தை தருகின்ற இயக்கமாக எப்போதும் திராவிட இயக்கம் இருந்துள்ளது.

இந்த பல்கலைக்கழகங்களுக்காக ஆண்டுதோறும் 3 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்கிறது. அத்தகைய சீரான நிதி ஒதுக்கீடுதான் பல்கலைக் கழங்கள் இந்தளவுக்கு சிறப்பாக செயல்பட காரணம். தமிழ்நாடு இந்தியாவில் உயர் கல்வி சிறந்து விளங்கும் மாநிலம் என்பதை அனைவரும் அறிவர்.

கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். நீதிக்கட்சிக் காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்கெல்லாம் காரணம். ஒருவருக்கு கல்வியை மட்டும் கொடுத்துவிட்டால் மிகப்பெரிய சொத்தாக அது அமைந்துவிடும். அத்தகைய கல்வி சொத்தை தருகின்ற இயக்கமாக எப்போதும் திராவிட இயக்கம் இருந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.