சென்னை: தமிழகத்தின் நம்பிக்கை விஜய், தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார் விஜய்  என கூறியதுடன், தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழல் வேறெங்கும் கண்டதில்லை என்று கூறியதுடன்,  இதனை சரிசெய்ய வேண்டும். த தவெக விழாவில் பிரசாந்த் கிஷோர் பரபரப்பாக பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் தொடங்கி  நடைபெற்றது. இன்று காலை விழாவுக்கு வருகை தந்த விஜய்க்கு, சாலையோரம் குவிந்த தவெகவினர் கையை அசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.   விழா மேடைக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து த.வெ.க. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா தொடங்கியது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய்யுடன் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் கலந்து கொண்டுள்ளார்.

விழா மேடையேறிய விஜய்க்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன்பின்னர் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக் கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த போர்டில்,   ‘Get Out’ கையெழுத்து இயக்கத்தை த.வெ.க. தலைவர் விஜய் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி தொடங்கியது.

முதலில் ‘2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சியமைக்க போகுது’ கண்டா வரச்சொல்லுங்க பாடல் புகழ் பாடகி கிடாக்குழி மாரியம்மாள் பாடலை பாடினார். இதனை தொடர்ந்து விஜய்க்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய மாரியம்மாளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த விஜய் புத்தகத்தை பரிசாக வழங்கி குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதனிடையே, பா.ஜ.க.வில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய வந்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில்,  தவெக ஆண்டுவிழாவில் பிரசாந்த் கிஷோர் பேசினார். அப்போது,   வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது உரையைத் தொடங்கினார்.  அவர் பேசியதாவது: ”தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் காரணமாக இருக்க முடியாது. உங்களின் வெற்றிக்கு நீங்கள் செய்யும் பணியே காரணம். உங்கள் தலைவரும் தொண்டர்களும் செய்யும் பணிகளால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

பிறகு நான் ஏன் வந்திருக்கிறேன் எனக் கேட்கலாம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் வியூகப் பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். 2021 தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்குவங்கத்துக்கான வேலை செய்த பிறகு நான் ஓய்வுபெற்றுவிட்டேன். இங்கு தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக நான் வரவில்லை. அவர்களுக்கு என் வியூகமும் தேவையில்லை.

நான் எனது சகோதரர், நண்பருமான விஜய்க்கு ஆலோசனை கூறவரவில்லை. அவருக்கு அது தேவையும் இல்லை. என்னைப் பொறுத்தவரை விஜய் ஒரு அரசியல் தலைவர் அல்ல, அவர் தமிழகத்தின் புதிய நம்பிக்கையாக இருக்கிறார். அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன்.

தவெக அரசியல் கட்சி அல்ல, இது லட்சக்கணக்கான இளைஞர்களின் இயக்கம். 35 ஆண்டுகால அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார் விஜய், அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன். என்னால் முடிந்த உதவிகளை செய்ய வந்துள்ளேன். எனக்கு தமிழ் பேச வராது, ஆனால் புரிந்துகொள்ள முடியும்.

அடுத்தாண்டு தவெக வென்றால், நான் மீண்டும் இங்கு வந்து தமிழில் நன்றி கூறி உரையாற்றுவேன்.

தமிழகத்தில் நடைபெறும் அரசியல் ஊழல் வேறெங்கும் கண்டதில்லை. இதனை சரிசெய்ய வேண்டும். தமிழகத்தில் தோனி மிகவும் பிரபலமானவர். அடுத்தாண்டு எனது பங்களிப்புடன் தவெக வெற்றி பெற்றால், அவரைவிட நான் பிரபலமாவேன்”

இவ்வாறு கூறினார்.