சென்னை:

காந்தியை சுட்டுக்கொன்ற நாதுரான் கோட்ஸேவுக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி அளிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்ஸேதான் இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்று பேசினார்.

இந்த பேச்சு நாடு முழுவதும் பெரிதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்து மத அடிப்படைவாதியான நாதுரான் கோட்ஸே யார் என்பதை மக்களுக்கு தெரிவிக்க மே 26-ம் தேதி சென்னை மைலாப்பூரில் கூட்டம் நடத்த பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது.

இந்த கூட்டம் நடத்த போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனிடையே, கோட்ஸே பற்றி மக்களுக்கு தெரிவிக்க பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் கூட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.