விபசார வழக்கில் தமிழ்நாடு அமைச்சரின் தனிச்செயலாளர் கைது!

Must read

பெங்களூரு:
மிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் தனிச் செயலாளர்  சத்தியநாராயணா  பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வந்த வழக்கல் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
1
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பானசவாடியில் உள்ள தனியார் விடுதியில் விபசார தொழில் நடப்பதாக அம் மாநில குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதையடுத்து அந்த விடுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் அங்கு பாலியல் தொழில் ஈடுபடுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை மீட்ட காவல்துறையினர்,  காப்பகத்திற்கு அனுப்பினர்.

சத்தியநாராயண
சத்தியநாராயண

அப்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டவர்களில்,   தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் உதவியாளர் சத்தியா என்கிற சத்தியநாராயணாவும் ஒருவர்.
அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி
அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

பெண்களை கடத்தி, அடைத்து வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்தின் பிரிவில் ( Crime No. 510/2016 u/s 3 4 5 & 7 PIT act. 370 IPC. ) சத்தியநாராயணாவை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக அமைச்சர் ஒருவரின் தனிச்செயலாளர் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article