சென்னை

மிழகத்தில் உள்ளாட்சித் தேர் தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 58 லட்சம் வாக்காளர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில், மாநில தேர்தல் ஆணையம், இந்திய தேர்தல் ஆணை யத்திடம் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்றுள்ளது.

கடந்த மாதம் வாக்குச்சாவடி அமைப்பது உள்பட பல்வேறு தேர்தல் நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், தெரிகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களும்  நியமிக்கப்பட் டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரித்து செப்டம்பர் மாதம் இறுதிக்குள் அனுப்பி வைக்குமாறு  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இதையடுத்து,  வாக்காளர் பட்டியல் அக்டோபர் 1-ம் தேதி பட்டியலை அச்சுப்பணிக்கு அனுப்பி, 3-ம் தேதி பணிகளை நிறைவு செய்து இன்று பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள மாநகராட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில், 58 லட்சம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

சென்னையில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வாக்களிக்க மொத்த மக்கள் எண்ணிக்கை 57,97,652 என்றும், வரைவுத் தேர்தல் பட்டியலில்  இன்று முதல் அனைத்து 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் 200 வார்டு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

இன்று வெளியாகி உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், ஆலந்தூர் மண்டலத்தில் (மண்டலம் 12) வார்டு எண் 159 ல் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் (2,921), கோடம்பாக்கம் மண்டலத்தில் (மண்டலம் 10) 137 வது வார்டு அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது (54,801)

உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்காக நகரம் முழுவதும் மொத்தம் 5,714 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பது குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை…