சென்னை:

மிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்குகிறது. 4 நாட்கள் மட்டுமே இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அன்று மாலை  சட்டசபை சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அதையடுத்து 3 நாட்கள் விடுமுறைக்கு முன் இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியது. இன்ற காலை  காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், பட்ஜெட் மீதான பொது விவாதம் நடக்கிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். பட்ஜெட் மீதான விவாதம் நாளையும், நாளை மறுநாளும் (21-ந் தேதி) தொடர்ந்து நடைபெறுகிறது.

இறுதி நாளான 22-ந் தேதி, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்.

அத்துடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது. தொடர்ந்து, துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றாக வேண்டும். ஆனால், அந்தக்கூட்டம் எப்போது நடைபெறும் என்பது குறித்து எந்தவித அறிவிப்பையும் சபாநாயகர் வெளியிடவில்லை.