சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் இன்று கூடியது. அதைத்தொடர்ந்து சபாநாயகர் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார். அதையடுத்து சபை நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய ஆட்சியின் கடைசி சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் 2021ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் நேற்று உரையாற்றினார். ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
இந்த நிலையில், இன்று 2வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. அதையடுத்து, மறைந்த மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, மருத்துவர் சாந்தா, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்பட22 பேருக்கு சபாநாயகர் தனபால் இரங்கல் தீர்மானம் வாசித்தார். பின்னர் சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.