தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல! அடிக்கடி மின் தடை குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்…

Must read

சென்னை: தமிழகத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நாடு மின் மிகை மாநிலம் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலம் என கூறப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில் மின்தடை அறவே நீக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீப காலமாக தமிழகத்தில் மீண்டும் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 9 மாதங்களாக அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை; இந்த பணிகள் அனைத்தும்  10 நாட்களுக்குள் முடிக்கப்படும், அதன் பின்பு முன்னறிவிப்பின்றி மின்தடை இருக்காது என்று கூறினார்.

மேலும்,  முந்தைய அரசு கூறியதுபோல, தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல என்று கூறியதுடன், நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால் தான் அது மின் மிகை மாநிலம். ஆனால் கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலம் என்று அழைத்தார்கள் என்று கூறியவர், அப்போது விவசாயிகளுக்கு போதிய மின்சாரம் தரவில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதுதோடர்பான கேள்விகள் அனைத்துக்கும் சட்டமன்றத்தில்‘பதில் தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article