சென்னை: தமிழக சட்டமன்றப்பேரவையின் ஆயுட்காலம் மே 24ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், அதற்கு முன்னதாக சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி உள்ளது.  அதன்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கிறார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சுனில அரோரா,  கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடத்துகிறோம்  என்றவர் ஏற்கனவே கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் தேர்தலை நடத்தியதை சுட்டிக்காட்டினார். தேர்தலை சுமூகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருவதாகவும் கூறினார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கும், கேரளாவில் 140 தொகுதிகளுக்கும், அசாமில் 126 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாமில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் உடனே அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ஆம் தேதி உடன் முடிவடைகிறது. கொரோனா தொற்று அச்சத்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகிறோம்.
தமிழகத்தில் கடந்த தேர்தலின்போது 66ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது  மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒரு வாக்குச்சாவடியில் அதிகப்பட்சமாக 1000 வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்களிக்கும் நேரம் ஒருமணி நேரம்  அதிகரிக்கப்படுகிறது.
தேர்தல் பாதுகாப்புக்கு மாநில காவல்துறையுடன், சிஆர்பிஎஃப் காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்த 5 மாநிலங்களுக்கும்  ஒரே சமயத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி உள்ளது.  அதன்படி  இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது..