சென்னை: நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,  தமிழ்நாடு  மதுவிலக்கு அமலாக்கப்‌ பணியில்‌ சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள்‌ காவல்‌ விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  மதுவிலக்கு அமலாக்கப்‌ பணியில்‌ பாராட்டத்தக்க வகையில்‌ பணியாற்றியமைக்காக கோ.சசாங்சாய்‌, இ.கா.ப. காவல்‌ கண்காணிப்பாளர்‌, விழுப்புரம்‌. மாவட்டம்‌, திரு.ப.காசிவிஸ்வநாதன்‌, காவல்‌ துணைக்கண்காணிப்பாளர்‌, மத்திய நுண்ணறிவு பிரிவு. தெற்கு. சென்னை, திரு.கா.மு.முனியசாமி. காவல்‌ ஆய்வாளர்‌, செங்குன்றம்‌ மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, ஆவடி காவல்‌ ஆணையரகம்‌, திரு. அ. பாண்டியன்‌, காவல்‌ உதவி ஆய்வாளர்‌, மத்திய நுண்ணறிவு பிரிவு மதுரை மண்டலம்‌ மற்றும்‌ திரு.ஜெ.ரங்கநாதன்‌, தலைமை காவலர்‌ 318, இராணிப்பேட்டை காவல்‌ நிலையம்‌, அயல்பணி மத்திய நுண்ணறிவு பிரிவு, இராணிப்பேட்டை ஆகியோருக்கு காந்தியடிகள்‌ காவலர்‌ விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களால்‌ 2024-ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதம்‌ 26-ஆம்‌ நாள்‌, குடியரசு தினத்தன்று வழங்கப்படும்‌ இவ்விருதுடன்‌. பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும்‌ வழங்கப்படும்‌.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.