பீஜிங்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த  ஆட்டோ ஓட்டுநரின் மகள் வித்யா ராம்ராஜ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இவர் , ஏற்கனவே ஓட்ட பந்தயத்தில் சாதனை படைத்த கேரளாவைச் சேர்ந்த பிரபல வீராங்கனை பிடி.உஷாவின் சாதனையை சமன் செய்துள்ளார். அதுபோல இன்று நடந்த ரோலர் ஸ்கேட்டிங்கில் இந்தியா இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றது.

ஆசிய போட்டிகளில் இந்தியா இதுவரை, தங்கம்: 13, வெள்ளி: 21, வெண்கலம்: 21 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

நடப்பாண்டு ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரகிறத. ஆசிய  விளையாட்டுப் போட்டியின் கான்டினென்டல் மல்டிஸ்போர்ட் நிகழ்வின் 19 வது  போட்டிகள்,  செப்டம்பர் 23 அன்று தொடங்கி அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், இந்தியா சார்பில், 655 பேர் கொண்ட  குழு பங்கேற்றுள்ளது.

9வது நாளான இன்று ( அக்டோபர் 2ஆம் தேதி) ஆண்களுக்கான 400 மீ தடை ஓட்டம் நடைபெற்றது. நாளை, அக்டோபர் 3ந்தி  மாலை 05.05 மணி பெண்கள் 400 மீ தடை ஓட்டம், மாலை 04.50 மணி ஆண்கள் 800 மீ ஓட்டம் உள்பட சில போட்டிகள் நடைபெறுகின்றன. நாளை அக்டோபர் 4, மாலை 04.30 மணிக்கு  ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியும் நடைபெற உள்ளது.

இன்றைய போட்டிகளின்போது, காலை நடைபெற்ற ஸ்பீடு ஸ்கேட்டிங் 3000 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இந்தியா வெண்கலப் பதக்கங்களை வென்றது.

பெண்கள் இரட்டையர் டேபிள் டென்னிஸ் ஜோடியான சுதிர்தா முகர்ஜி மற்றும் அய்ஹிகா முகர்ஜி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கத்தையாவது உறுதி செய்ய வேண்டும். இந்த ஜோடி காலிறுதியில் சீனாவின் மெங் சென் மற்றும் யிடி வாங் ஜோடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இது சில அதிர்ச்சி அலைகளை அனுப்பியது.

இதையடுத்து தடகள போட்டி நடைபெற்றது. இதில்,  இந்திய வீரர்கள் தேஜஸ்வின் சங்கர், வித்யா ராம்ராஜ் ஆகியோர் சிறப்பாக விளையாடி பதக்கம் பெறுவதற்கான  நம்பிக்கையை வலுப்படுத்தினர். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்ற தமிழக வீராங்கனை  வித்யா ராம்ராஜ் சிறப்பாக ஆடி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆடவருக்கான 800 மீட்டர் ஹீட் போட்டியில் முஹம்மது அப்சல் புலிக்கலக்கத் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். அதுபோல மற்றொரு வீரரான கிருஷ்ணன் குமார் ஆடவர் 800 மீட்டர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்

ஜெஸ்ஸி சந்தேஷ் ஆடவர் உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார், மற்றொரு போட்டியில், ஆடவர் உயரம் தாண்டுதல்  சர்வேஷ் குஷாரேஇறுதிப் போட்டிக்கு  தகுதி பெற்றார்

சந்தோஷ் குமார் தமிழரசன் ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்

ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிப் போட்டிக்கு யஷாஸ் பலாக்ஷா தகுதி பெற்றார்

வித்யா ராம்ராஜ் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்

வித்யா ராம்ராஜ் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.  அத்துடன் கேரளவைச்சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் தேசிய சாதனையை  சமன் செய்துள்ளார்.

கடந்த  1984 லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற  ஒலிம்பிக் போட்டியின்போது,  பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பிடி உஷா 55.42 வினாடிகளில் பந்தயத்தை கடந்தார். இருப்பினும், இது உஷா வெல்ல போதுமான நேரமாக இல்லாமல் இறுதிப் போட்டியில் 4வது இடத்தை பிடித்தார்.  ஆனால், இந்திய அளவில் தேசிய சாதனையாக பதிவானது.

இந்த சாதனையையை கடந்த  39 ஆண்டுகளாக மற்ற இந்திய வீரர்களால் முறியடிக்க முடியாத நிலையில், தற்போது தமிழக வீராங்கனை வித்யா படைத்தார். பி.டி.உஷாவின் இந்த சாதனையை தொட்டு சமன் செய்துள்ளார்.

யார் இந்த வித்யா ராம்ராஜ்..?

தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில்  வசிப்பவர் வித்யா ராம்ராஜ். கொரோனாவுக்கு பிறகு அவர் சென்னைக்கு மாறினார். இவரது தந்தை ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார்.  வித்யா,  நித்யா. வித்யா  இருவரும் இரட்டை சகோதரிகள், இருவரும் தடகளத்தில் இந்தியாவிற்காக களமிறங்கியுள்ளனர். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் வித்யா பங்கேற்கும் நிலையில், 100 மீட்டர் தடை ஓட்டத்தில் நித்யா பலம் காட்டி வருகிறார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு இரட்டைச் சகோதரிகள் இணைந்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறை.

கடந்த வாரம் இதே வித்யா ராம்ராஜ் சண்டிகரில் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியின் ஐந்தாவது லெக்கில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.43 வினாடிகளில் ஓடி தங்கம் வென்றார். அப்போது, ஒரு நொடியில் தவறவிட்ட வித்யா, இன்று 55.43 வினாடிகளில் கடந்து பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்தார்.

இந்தியாவின் நட்சத்திர தடகள வீரர்களில் ஒருவரான தேஜஸ்வின் சங்கர், இன்று நடைபெற்ற டெகாத்லானில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டெகாத்லானின் முதல் போட்டியான நீளம் தாண்டுதல் போட்டியில் அவர் முதலிடம் பிடித்தார். தேஜஸ்வின் சங்கர் தனது முதல் முயற்சியிலேயே 7.37 மீட்டர் குதித்தார். இதன் மூலம் 903 மதிப்பெண்கள் பெற்றார்.