நெல்லை:  வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு,  திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள திருச்செந்தூர் உள்பட முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, வரும் 22ந்தேதி வைகாசி விசாகம் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதே வேளையில் ரயில்வேயும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து,. வைகாசி விசாகத்தையொட்டி திருநெல்வேலி – திருச்செந்தூருக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மே 22ஆம் தேதி புதன்கிழமை  அன்று  சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர், பழனி உள்பட முருகன் கோவில்களில் மே 22ல் தொடங்குகிறது வைகாசி விசாகம் – வசந்த விழா – விவரம்