சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளக்கும், சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிர்த்தியாளர்கள், சிறந்த விளையாட்டு ஆசிரியர்கள், நடுவர்களுக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி, விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 2018-19, 2019-20-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-19-ல் சிறந்த டென்னிஸ் வீரர்களாக பிருத்வி சேகர், நெடுஞ்செழியன், துப்பாக்கிசூடுதல் வீராங்கனை ஸ்ரீநிவேதா, ஸ்குவாஷ் வீராங்கனை சுனைனா சாரா குருவில்லா, துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சத்குருதாஸ் தேர்வு செய்யப்ட்டுள்ளனர்.

தடகள பயிற்சியாளர் ஜி.கோகிலா, கால்பந்து பயிற்சியாளர் ராஜேஷ் கன்னா, வாலிபால் பயிச்சியாளர் எம்பி முரளிக்கு விருது வழங்கபடுகிறது.  கூடைப்பந்து விளையாட்டு வீரர் விபி தனபால் குமார், சிறந்த விளையாட்டு அமைப்பாக தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2019-20-ல் சிறந்த வீராங்கனைகளாக அனுசுயா பிரியதர்சினி (டேக்வாண்டோ) செலினா தீப்தி (டேபிள் டென்னிஸ்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்று சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தேர்வாகியுள்ளார்.

தடகள பயிற்சியாளர் கேஎஸ் முகமது நிஜாமுதின், கால்பந்து பயிற்சியாளர் கோகிலா, பேட்மிண்டன் பயிற்சியாளர் ராமசுப்பிரமணியன், வாலிபால் பயிற்சியாளர் ஆரோக்ய மெர்சிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  கபடி போட்டி நடுவர் சுந்திரராஜ் 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடுவருக்கான முதலமைச்சரின் விளையாட்டுத்துறை விருதை பெறுகிறார்.

விருது பெறுவோர் – முழு பட்டியல் விவரம் : 

சிறந்த விளையாட்டு வீரர்கள் – ஆண்கள் (2018-2019)

எஸ். பிருத்வி சேகர் – லான் டென்னிஸ்

ஜீவன் நெடுஞ்செழியன்- டென்னிஸ்

சிறந்த விளையாட்டு வீரர்கள் – பெண்கள்

பி. ஸ்ரீ நிவேதா – துப்பாக்கி சுடுதல்

சுனைனா சாரா குருவில்லா – ஸ்குவாஷ்

சிறந்த பயிற்சியாளர்கள்

சத்குர்தாஸ்- துப்பாக்கி சுடுதல்

கோகிலா – தடகளம்

சி.ராஜேஷ் கண்ணா – கால்பந்து

சிறந்த விளையாட்டு இயக்குனர்(PD)

எம்.பி. முரளி – பீச் வாலிபால்

சிறந்த நடுவர் 

வி.பி.தனபால் – கூடைப்பந்து

சிறந்த அமைப்பாளர்

தமிழ்நாடு கூடைப்பந்து

சிறந்த விளையாட்டு வீரர்கள் – ஆண்கள் (2019-2020)

பிரஜ்னேஷ் குணேஸ்வரன்- லான் டென்னிஸ்

ஆர்.மோகன் குமார் – தடகளம்

சிறந்த விளையாட்டு வீரர்கள் – பெண்கள்

பி. அனுஷியா பிரியதர்ஷினி- டேக்வாண்டோ

எஸ்.செலினா தீப்தி – டேபிள் டென்னிஸ்

சிறந்த பயிற்சியாளர்கள்

கே.எஸ்.முகமது நிஜாமுதீன் – தடகளம்

எஸ்.கோகிலா – கால்பந்து

சிறந்த விளையாட்டு இயக்குனர்(PD)

ஆர்.ராமசுப்ரமணியன் – பால் பேட்மிண்டன்

ஏ.ஆரோக்கியா மெர்சி – வாலிபால்

சிறந்த நடுவர் 

டி.சுந்தரராஜ் – கபடி