திருச்சி; மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

அதிமுகவை சேர்ந்த சுதா மணப்பாறை நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தேர்தல் நடைபெற்றது.  மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் கீதா மைக்கேல்ராஜ் வெற்றி பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட கீதா 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மணப்பாறை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமன் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். மணப்பாறை நகராட்சியில் மொத்தமுள்ள 27 கவுன்சிலர்களில் ஒருவர் வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், 26 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். இதில் அதிக வாக்குகள் பெற்று திமுகவைச் சேர்ந்தவர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

மேலும், கரூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கிய புலியூர் பேரூராட்சியின் தலைவராக திமுகவின் புவனேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார். புலியூர் பேரூராட்சிக்கு திமுகவை சேர்ந்தவர் தலைவராக தேர்வானதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கலாராணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.