சென்னை: தமிழ் சகோதர சகோதரிகள் அனைவரது வாழ்விலும் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி நிரம்பட்டும் என்று  தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்திக் குறிப்பில், “தமிழ் சகோதர- சகோதரிகள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

பொங்கல் பண்டிகை என்பது அறுவடை திருநாளில் கொண்டாட்டம் ஆகும். இந்த நன்நாளில் நமக்கு வாழ்வு, ஆற்றல் மற்றும் உயிர்ச்சக்தியை வழங்கிய சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். ‘தை’ மாதத்தின் தொடக்கத்தில் கடவுளின் ஆசீர்வாதத்திற்காக நாம் பிரார்த்தனைகளைச் செய்கிறோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும், கட்ச் முதல் கம்ரூப் வரையிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்நாளில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இவை அனைத்தும் பாரதத்தின் பகிரப்பட்ட ஆன்மிக கலாசாரத்தில் வேரூன்றியிருந்தாலும் – நம் மக்களின் வளமான பன்முகத்தன்மைக்கு அடிப்படையான உள்ளார்ந்த ஒருமையை பிரதிபலிக்கிறது. இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை நிரப்பட்டும்.

தமிழ்நாட்டு சகோதர சகோதரிகள் கோவிட் விதிமுறைகளை கடைப்பிடித்து பொங்கல் கொண்டாட கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.