சென்னை:  மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்கும் வகையில் தமிழகஅரசு கொண்டு வந்துள்ள  மசோதா மீது கட்சி தலைவர்கள் உரையாற்றனிர். அப்போது,  துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் உள்ள சுயாட்சி அதிகாரமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த மசோதாவுக்கு  அதிமுக, பாஜக தவிர்த்து இதர கட்சிகள் அனைத்தும் கட்சிகளும் ஆதரவு அளித்தன. தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு.

தமிழக சட்டப்பேரவை மீண்டும் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது அரசு பல்கலை. துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மூலம் சென்னை பல்கலை. உள்பட 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து அரசுக்கு மாற்றப்படுகிறது.

பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசு நியமிக்க முடியாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியால் துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் இருப்பது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணை வேந்தரை நியமிக்கும் ஆளுநருக்கு வழங்கக்கூடாது என நீதிபதி குழு கூறியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி பூஞ்சி ஆணைய பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என தமிழக அரசு கருத்து தெரிவித்துள்ளது.

ஆளுநர் துணைவேந்தர்களை நியமனம் செய்து வரும் நிலையில், அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  அந்த மசோதாமீது பேசிய அமைச்சர்  துணை வேந்தர்களை ஆளுநர் நியமிப்பதால் அரசு கொள்கை முடிவு எடுப்பதில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றும் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார் என்றும் கூறினார்.

மசோதாமீது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,  பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசை ஆளுநர் மதிக்காமல் செயல்படுவது மக்கள் விரோதப் போக்கையே காட்டுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசே நியமிக்கவேண்டும். மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி உள்ளது,  பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்திலேயே துணை வேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலத்திலும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, விசிக, உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தமிழக அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

மசோதா மீது பேசிய விசிக உறுப்பினர்,  கடந்த 4 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் அனைவரையும் மாற்ற  வேண்டும் என வலியுறுத்தியதுடன்,   4 ஆண்டில் ஆளுநரின் பின்னால் இருந்து இயக்கும் ஒன்றிய அரசு, தமிழக கல்வி முறையின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியதுடன் ,  பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசு நியமிக்க முடியாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.  ஊட்டியில்  ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும்,  இதற்கு முன் நடந்த துணைவேந்தர் நியமனம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என சிந்தனைச்செல்வன் கூறினார்.

பாமக தலைவர் ஜி.கே.மணி பேசும்போது,  பல்கலைக்கழகம் என்பது ஒரு மாநில பொருளாதார வளர்ச்சியின் அங்கமாக உள்ளது என்றார்.

துணைவேந்தர்களை நியமிப்பது போலவே ஆளுநரையும் மாநில அரசே பரிந்துரைக்க வேண்டும். தமிழக அரசு பரிந்துரைக்கும் 3 பேரில் ஒருவரை ஆளுநர்களாக நியமிக்க வேண்டும் என ஈஸ்வரன் தெரிவித்தார்.

துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசு வசமே இருக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய  தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குமண்டல தேசிய கட்சி, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதாவுக்கு  ஆதரவு தெரிவித்துள்ளன.

ஏற்கனவே துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்ட கால்நடை, மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கும் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் நடுநிலையோடு திறமைவாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும்போது அரசியல் உள்நோக்கத்துடன் இருக்க வாய்ப்புள்ளது என்று பாஜக உறுப்பினர்  நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து அவையில் இருந்து வெறிநடப்பு செய்தார்.