சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத மழை காரணமாக இந்தப் பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்றபோதும் அரசு மற்றும் தன்னார்வலர்கள் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கையால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் மழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் காணாமல் போன ஆவணங்களைத் திரும்பப்பெற சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் தங்கள் காணாமல் போன பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்ட் உள்ளிட்ட பிற முக்கிய ஆவணங்களைத் திரும்பப்பெற 11-12-2023 அன்றும் சென்னையில் உள்ளவர்களுக்கு 12-12-2023 அன்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்துள்ளது.