சென்னை: சென்னையின் 6வது செயற்கைக்கோள் நகரமாக மாமல்லபுரம் உருவாக்கப்படும் என  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, அந்த பகுதியில் உள்ள  25 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய சென்னையின் 6வது செயற்கைக்கோள் நகரமாக மாமல்லபுரம் உருவாகும்  தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுலா மற்றும் நீர்முனை மேம்பாடு போன்றவற்றுக்கு தீர்வு காண புதிய நகரத் திட்டம் வகுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் 2023, ஜனவரி 9ந்தேதி அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினம்  வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில், மாமல்லபுரம் அருகே துணை நகரம் அமைக்கப்படும் என்றும் அவர் அறிவிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரைச் சாலையில் அமையவுள்ள இந்த நகரம், சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் என்றும் ஆளுநர் கூறினார்.

அதைத்தொடர்ந்து 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடைபெற்ற  ‘பிராப்பர்ட்டி எக்ஸ்போ’ எனும் ரியல் எஸ்டேட் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொலைநோக்கு திட்டம் – 2030-ஐ’ வெளியிட்டார். அப்போது, புதிய துணைக் கோள் நகரங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.

இதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தை துணைக்கோள் நகரமாக மாற்றுவதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தன.  சென்னைக்கு மிக அருகில் மாமல்லபுரம் உள்ளதால், பெரும் வரவேற்பை பெறும் என்ற நோக்கில் அதற்கான திட்டம் வடிவமைப்பப்பட்டது.  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக உள்ள மாமல்லபுரம் கடல் வளம் மிக்கது. மேலும்,  இங்கே துணைக்கோள் நகரம் வரும் பட்சத்தில் இந்த மாமல்லபுரம் மின்சார ரயில் வசதி மற்றும் மெட்ரோ ரயில் வசதி மற்றும் விரிவான சாலை வசதிகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டன.  மேலும்,  நியூ டவுன் அமைப்பதற்கான கன்சல்டன்சி பணிகளுக்கு டெண்டர் விடுக்கப்பட உள்ளது . விரைவில் இதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், , மாமல்லபுரத்தை 6வது செய்றைக்கோள் நகரமாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.   சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில்  மாற்றவும், அண்ணா சாலை போல பெரிய சாலைகள், உயர் கட்டிடங்கள், சுற்றுலா அமைப்புகள் இங்கே உருவாக்கப்படும். அதேபோல் புதிய நிறுவனங்கள், முதலீடுகள் இங்கே ஈர்க்கப்படும். மேலும் சாலைக்கு கீழே மின்சாரம், ஸ்மார்ட் சிட்டி அமைப்புகள், நவீன கட்டிடங்கள், புதிய பாலங்கள் அமைக்கப்படும். முக்கியமாக இங்கே இருக்கும் கிழக்கு கடற்கரை சாலை வளத்தை பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி மாமல்லபுரம் அருகே உள்ள வளவந்தாங்கல், சந்தானம்பட்டு, நெம்மேலி, கிருஷ்ணங்கரணை, திருப்போரூர், சலுவன்குப்பம், பட்டிபுலம், தண்டலம், வெங்கலேரி, ஆலத்தூர், பையனூர், சிறுதாவூர், அதிகமநல்லூர், காரணை, பஞ்சந்திருத்தி, தட்சிணாவர்த்தி, ஆமூர், பொருந்தவாக்கம், கோவைலிமேடு, கோவைலிமேடு, கோவைலிபுரம் ஆகிய 25 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி, சென்னையின் 6வது துணைக்கோள் நகரமாக மாற்றப்படும் என்றும், மேம்பாடு, சுற்றுலா மற்றும் நீர்முனை மேம்பாடு போன்றவற்றுக்கு தீர்வு காண புதிய நகரத் திட்டம் வகுக்கப்படும் என்று  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.