சென்னை: 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு அதற்கான தேதிகளையும் வெளியிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் நல வாரியமான பீட்டா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், வரும் பொங்கலையொட்டி, தமிழ்நாட்டின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்த உள்ளத.

அதன்படி, ஜனவரி 14ந்தேதி பொங்கல் நாளன்று மதுரை அவனியாபுரத்திலும், அடுத்த நாளான மாட்டுப்பொங்கல் அன்று ஜனவரி 15ம் தேதி பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாளான  ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.