சென்னை:  ”ஆளுநரின் செயல்பாடுகள், மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக உள்ளது. இது  சட்டவிரோதம்” – என தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள   கூடுதல் மனு  இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே  மோதல் போக்கு நீடித்து வருகிறது. ,இதனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதை கண்டித்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம் ஆளுநரின் செயலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும், ”ஆளுநர் ரவி முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமர்ந்து பேச வேண்டும்”  என்றும் அறிவுறுடத்தியது.

இதற்கிடையில்,  e: ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது என தமிழ்நாடு ஆளுநர்  ஆர்.என். ரவிக்கு எதிராக வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனுவ தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில்,  “கடந்த நவம்பர் 18-ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை, ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்.

இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீது ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறருது. ,இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று ஏதேனும் உத்தரவு பிறப்பிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற கடந்த விசாரணையின்போது,  மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு வந்த மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பரிந்துரைத்ததாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்க, ஆளுநருக்கு உரிமை இல்லை. இந்த விவகாரத்தில் அளுநரே தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக தான், ”மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு பரிந்துரைத்த ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது எனவும், 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும்” தமிழ்நாடு அரசு கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளது.