தமிழகத்தில்தான் பிஹெச்டி மாணவர்கள் அதிகம்: மனிதவள மேம்பாட்டுத்துறை தகவல்

Must read

டெல்லி:

ந்தியாவிலேயே தமிழகம்தான் அதிகளவில் பி.ஹெச்.டி மாணவர்களை உருவாக்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில்  மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இவ்வாறு தெரிவித்தது.

கடந்த ஆண்டு மூன்றாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர் பி.ஹெச்.டி தேர்வில் தேர்வானதாகவும் இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 600 பேர் அதிகம் என்றும் கூறியது.

இந்திய அளவில் பிஹெச்டி தேர்வில் 24 ஆயிரம் பேர் தேர்வாகியிருப்பதாகவும் இதில் சுமார் 16 சதவிதம் தமிழக மாணவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை அடுத்து உத்தரபிரதேசம் இரண்டாம் இடத்தை பெறுகிறது. கடந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில்  2205 பி.ஹெச்.டி மாணவர்கள் என்றும் கர்நாடகாவில் 1945 பேர் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

1 COMMENT

Latest article