சென்னை:

மிழகத்திற்கு மேலும் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இதற்கான நிதியை மத்தியஅரசு வழங்கினால், தமிழகத்தில் மேலும் 900 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏற்கெனவே 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,250 இடங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, பெருந்துறை ஐஆர்டி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள 350 இடங்கள் ஆகியவற்றுடன் புதிதாக அமைக்கப்படும் கல்லூரிகளின் இடங்களையும் சேர்த்தால் அரசுக் கல்லூரிகளில் மட்டும் 4,500 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கும்.

இதன்மூலம் அதிகபட்ச மருத்துவ இடங்கள் கொண்ட மாநிலம் என்ற பெருமை தமிழகத்துக்கு கிடைக்கும். தலா ரூ.325 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்த மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் வரும் 2021-22 ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க இந்திய மருத்துவக் குழுவின் தொழில்நுட்பக்குழு அனுமதி அளித்துள்ள நிலையில்,  அதைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் பயனாக தமிழகத்திற்கு இப்போது 6 மருத்துவக் கல்லூரிகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர் இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைத்து ஏற்படுத்தப் படவுள்ள இந்தக் கல்லூரிகள் அனைத்திலும் தலா 150 இடங்கள் இருக்கும்.

இதுகுறித்து கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகஅரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றதற்கு நன்றி தெரிவித்தவர், இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு இது ஒரே நேரத்தில் அதிகஅளவிலான அனுமதி என்று கூறியவர், இந்த அனுமதியைப் பெற நாங்கள்  பெற கடுமையாக உழைத்தோம் என்று கூறியவர், சீன அதிபர்,  ஜி ஜின்பிங்கின் வருகையின் நாளில், 24 மணி நேரத்தில் இதற்கான உத்தரவில் ஐந்து அமைச்சர் களால் கையெழுத்திடப்பட வேண்டியிருந்தது என்றவர், தானும் ஒரு உத்தரவில் மாமல்லபுரத்தில் கையெழுத்திட்டேன் என்றும் தெரிவித்தார்.