சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு  கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களையும், அவர்களது  மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  இலங்கைக் கடற்படையினர் 10:03. 2024 அன்று. இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மூன்று மீன்பிடி விசைப்படகுகளை சிறைபிடித்துள்ளதோடு 72 மீனவர்களை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டு இது நமது நாட்டு மீனவர்களின் நலனை பாதிக்கும் பெரும் கவலைக்குரிய சம்பவம் என்பதால், மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.