சென்னை: சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றவர்கள் திரும்பும் வகையில், சென்னையிலிருந்து நெல்லைக்கு நசாளை இரவு  முன் பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில்  ஏப்ரல் 23ந்தேதி  234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற வாக்காளர்கள் 5.73 கோடி. இதில், சுமார் 1 கோடியே 18 லட்சம் இளம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் சுமார் 20 சதவீதம். இளம் வாக்காளர்களில் 14.6 லட்சம் முதன்முறை வாக்காளர்கள்.

இந்த ஆண்டு தமிழகத்தில் வாக்குப்பதிவு 85.15% பதிவாகியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், எஸ்ஐஆர்-க்கு பிறகு தற்போது  நடைபெற்ற தேர்தலில் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.36 சதவீதம் பதிவானது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீதமும் சென்னை மாவட்டத்தில் 83.74 சதவீதமும் பதிவானது.

வாக்குப்பதிவையொட்டி லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழ்நாடு அரசு சிறப்புபேருந்துகளை இயக்குவதாக கூறினாலும், முறையாக இயக்கப்படவில்லை என்பது,  பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம், போராட்டம் போன்றவை அம்பலப்படுத்தியது.

இந்த நிலையில், சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பும் வகையில், தெற்கு ரயில்வே முன்பதிவில்லா மெமு ரயிலை இயக்குவதாக அறிவித்துள்ளது.

அதன்படி,  சென்னை எழும்பூரிலிருந்து  நாளை இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் நள்ளிரவில்  புறப்பட்டு நாளை (ஞாயிறு) காலை 10.45 மணக்கு நெல்லை சென்றடைகிறது.

தொடர்ந்து நெல்லையிலிருந்து ஞாயிறு பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. கோடைக்கால கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில், அனைவருக்கும் தடையற்ற பயணத்தை உறுதிசெய்யும் விதமாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது..

[youtube-feed feed=1]