தமிழகத்தில் புதிதாக 5883 பேருக்கு கொரோனா- மாவட்டம் வாரியாக பட்டியல்

Must read

சென்னை:
மிழகத்தில் இன்று மேலும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரித்தது .

இன்று சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று 5,883 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாகவும், அதில் சென்னை மாநகராட்சியில் ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை 986” என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில், கொரோனாவால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் , மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,808-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 65,872 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில், 30,41,529 பேருக்கு இதுவரை கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது.

குணமடைவோர் எண்ணிக்கை: இன்று மட்டும் 5,043-பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 5,883 என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இதுவரை 2,32,618-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது, நோய்த் தொற்றால் பாதித்தவர்களில் 79.96 சத விகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம், தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,481 ஆக உள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,08,124 ஆக உயர்ந்தது. சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெரும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 11,734 ஆக உள்ளது.

மற்ற மாவட்டங்களின் நிலவரம்:

More articles

Latest article