சென்னை: பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 5ந்தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க டிசம்பர் 4ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.

ஜி20 நாடுகளின் தலைமை பதவியை பெற்றுள்ள இந்தியா, வரும் 2023ம் ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் டிசம்பர் 5ந்தேதி மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டம்  நடைபெறவுள்ளது.

அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டிசம்பர் 4ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகி உள்ளன. அப்போது, பிரதமரி மோடி தனியாக சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும், அப்போது,   தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகள் மனுவை பிரதமரிடம் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டிசம்பர் 7 ந்தேதி தொடங்குகிறது. முன்னதாக டிசம்பர் 6ந்தேதி  அன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.